புதிய MP கள் பாராளுமன்றில் நினைத்த இடத்தில் அமரலாம்
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தில் அமரவுள்ளனர்.
இதற்கிணங்க எதிர்வரும் 21 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்ற முதலாவது சபை அமர்வு குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிப்பார்.
பாராளுமன்றத்தில் தேர்தல் மூலம் 196 பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியல் மூலம் 29 பாராளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 225 ஆகும்.
பாராளுமன்ற அமர்வில் முதலாவது தினம் மிகவும் முக்கியத்துவமான தினமாகும் இத்தினம் அதிகமான பொறுப்புக்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தையே சாரும் பாராளுமன்ற முதலாவது தின அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் சம்பிரதாயப்படி ஒதுக்குவது இல்லை.
இத்தினம் எம்.பி.க்களுக்கு விருப்பமான எந்த இடத்திலும் அமரும் உரிமை இத்தினத்தில் கிடைத்து விடுகிறது.
இத்தினம் செங்கோல் பாராளுமன்ற மண்டபத்தில் வைக்கப்படுவதுடன் பாராளுமன்ற சபாநாயகர் நியமனம் சபாநாயகர் சத்திய பிரமாணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் பிரதி சபாநாயகர் தெரிவு போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமனங்களும் இடம் பெறும்.