பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய குரங்கு அம்மை(mpox) திரிபு
பிரித்தானியாவில்(UK) ஒரு புதிய வகை குரங்கு அம்மை(mpox) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த திரிபு சமீபத்தில் ஆசியாவில் பயணம் செய்து திரும்பிய ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் திரிபு, இரண்டு குரங்கு அம்மை திரிபுகளின் கூறுகளைக் கொண்டுள்ளது, அவை clade Ib மற்றும் clade IIb என அழைக்கப்படுகின்றன.
‘clade Ib’ எனப்படும் ஒரு வகை வைரஸ், சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளூர் பரவலுக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியதால் அந்த அழைப்பு வந்தது.
‘ clade IIb’ என்பது 2022ம் ஆண்டில் உலகளாவிய அளவில் குரங்கு அம்மை பரவலுடன் தொடர்புடையது, இது உலகளவில் பல நாடுகளைப் பாதித்தது.
இந்நிலையில், புதிய வகையின் முக்கியத்துவத்தை மதிப்பிட்டு வருவதாக பிரித்தானியாவின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த சமீபத்திய திரிபுக்கு எதிராக தடுப்பூசி எவ்வளவு சிறப்பாகப் பாதுகாக்கிறது என்பது குறித்து எந்த ஆய்வும் இல்லை, இருப்பினும் அதிக அளவிலான பாதுகாப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.




