சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் வாழும் முதியவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
சிங்கப்பூரில் அடுக்குமாடி வீடுகளில் முதியவர்களுக்காக சிறப்புப் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்படவிருக்கின்றன.
மூத்தோர் தங்கள் வீடுகளிலும் பேட்டைகளிலும் துடிப்பாகவும் சுயேச்சையாகவும் செயல்பட அது உதவும் என குறிப்பிடப்படுகின்றது.
EASE திட்டத்தின் 2ஆம் கட்டத்தில் புதிய வசதிகள் வருகின்றன. குளியல் அறை வாசலில் உள்ள தடுப்பின் உயரத்தைக் குறைப்பது போன்ற பல வசதிகள் அமைக்கப்படுகின்றன.
மூத்தோரின் நடமாட்டத்துக்கு உதவியாகச் சக்கரநாற்காலிகள் வழங்கப்படும். வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்தோர் அனைவருக்கும் புதிய எச்சரிக்கை மணி வழங்கப்படவிருக்கிறது.
புக்கிட் மேரா, காலாங்-வாம்போ வட்டாரங்களில் வசிக்கும் சுமார் 27,000 முதியோர் அதனால் பயன்பெறுவர்.
(Visited 6 times, 1 visits today)