அறிவியல் & தொழில்நுட்பம்

வட்ஸ்அப்பில் அமுலுக்கு வரும் புதிய வரம்பு – பயனர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

உலகெங்கிலும் உள்ள பயனர்களை ஸ்பேம் செய்திகள் மற்றும் விளம்பர அறிவிப்புகளால் ஏற்படும் தொல்லையில் இருந்து பாதுகாக்க, வட்ஸ்அப் (WhatsApp) ஒரு புதிய செய்தி வரம்பு (Messaging Limit) அம்சத்தை சோதித்து வருகிறது.

அதிகரித்து வரும் வணிகச் செய்திகள் மற்றும் தெரியாத தனிநபர்களின் ஸ்பேம் (Spam) செய்திகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதற்கமைய, அறியாத பயனர்களுக்கு (Unknown Recipients) வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அனுப்பும் செய்திகளின் எண்ணிக்கையை இந்த வரம்பு கட்டுப்படுத்தும்.

அனுப்புநரிடமிருந்து ஒரு பதில் வரும் வரை, அனுப்பப்படும் அனைத்துச் செய்திகளும் (உதாரணமாக, தொடர்ந்து அனுப்பப்படும் 3 செய்திகள்) இந்த வரம்பின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.

வரம்பை நெருங்கும்போது, பயனர்களுக்குச் சாதனத்தில் எச்சரிக்கை செய்தி காண்பிக்கப்படும்.

வரும் வாரங்களில் பல நாடுகளில் இந்த சோதனை செய்யப்பட உள்ளது. ஒரு நாளில் அதிகப்படியான ஸ்பேம் (Spam)செய்திகளை அனுப்பும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பேம் (Spam) செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்காக வட்ஸ்அப் வட்ஸ்அப் (WhatsApp) பல ஆண்டுகளாக இதுபோன்ற வரம்புகளைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்