செய்தி

பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைவர்கள் அறிவிப்பு..!

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பையில் 9 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இடம்பெற்று குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது.

இதனால் கேப்டன் பாபர் அசாமை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறிவந்தனர்.

இதைத்தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து கேப்டன் பாபர் அசாம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய கேப்டன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக ஷஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி