ஜெர்மனியில் அமுலாகும் புதிய சட்டம் – வாகனம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் காபனீர் ஒட்சைட் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மன் அரசாங்கமானது கரியமல வாயுவின் வெளியேற்றைத்தை குறைப்பதற்காக வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கரியமல வாயுவின் வெளியேற்றத்தை 65 வீதம் குறைப்பதற்கு புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சட்டமானது எதிர்வரும் ஜுலை மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் இந்த புதிய சட்டத்துக்கு எதிரான கருத்தை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதாவது தான் இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீதிகளில் வாகனங்கள் செலுத்தப்படுவதை முற்றாக தடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதத்தில் இருந்து ஏற்கனவே இயற்றப்பட்ட புதிய சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.