அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 15 இல் புதிய சிக்கல் – கோபத்தில் பயனாளிகள்

Apple நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iPhone 15 கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றது.

இது பற்றிக் குறைகூறல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சாதனத்தைப் பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும்போதோ iPhone மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனீட்டாளர்கள் சிலர் கூறினர்.

மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது FaceTime காணொளி மூலமாகப் பேசும்போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய A17 சில்லுவால் பிரச்சினை ஏற்படுகிறதா என்ற கேள்வி வந்துள்ளது.

புதிய சாதனங்களைப் பயன்படுத்தும்போதும் குறிப்பிட்ட சில செயலிகளைப் பயன்படுத்தும்போதும் அவ்வாறு நேர்வது வழக்கம் என்று Apple நிறுவனம் கூறுகிறது.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!