இந்தியாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு தொடர்பில் வெளியான புதிய தகவல்!
இந்தியாவில் பயிற்சி மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை தன்னார்வலர் ஒருவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியில் இருந்தபோது 31 வயது மருத்துவர் ஆகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார்.
வழக்கு விசாரணையில் 33 வயதான சஞ்சய் ராய்க்கு தண்டனை திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும் நீதிபதி அனிர்பன் தாஸ் கூறினார்.
இந்நிலைியல் கடந்த 2022 ஆம் ஆண்டில், காவல்துறை 31,516 பாலியல் வன்கொடுமை புகார்களைப் பதிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது 2021 ஐ விட 20% அதிகரிப்பு என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகம் தெரிவித்துள்ளது.





