சிங்கப்பூரில் இளம் தம்பதிகளுக்கு புதிய வீடு – அமுலாகும் புதிய திட்டம்

சிங்கப்பூரில் இளம் தம்பதிகள் வீடு வாங்குவதை எளிதாக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, கழக வீடு வாங்க விரும்பும் இளம் தம்பதியில் ஒருவர் முழுநேர மாணவர் அல்லது தேசியச் சேவையாளராக இருந்தால் அவர்கள் வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்க உதவும் புதிய திட்டத்துக்குத் தகுதிபெறுவர்.
விண்ணபிக்கும்போது வருமானத்தைக் காட்டத் தேவையில்லை எனவும் சாவி வாங்குவதற்முன் காட்டினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் புதிய திட்டம் அமுலுக்கு வருகிறது. அத்தகைய தம்பதிகள் வீடுவாங்குவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புதிய திட்டம் அறிமுகம் காண்கிறது.
தம்பதிகள் கடன் கிடைப்பதிலும் வீட்டு முன்பணம் செலுத்துவதிலும் சிக்கலை எதிர்நோக்குகின்றனர்.
வருமான மதிப்பீட்டை ஒத்திவைக்கும் திட்டத்தை இளம் தம்பதிகளுக்கு விரிவுபடுத்துவதால் அவர்கள் கூடுதல் கடனுக்குத் தகுதிபெறமுடியும்.
பின்னொரு தேதியில் வருமானம் மதிப்பிடப்படுவதால் இருவரின் சம்பளமும் கருத்தில்கொள்ளப்படும். இதனால் வீட்டு முன்பணம் குறையும். மேலும் சிறந்த வட்டாரத்தில் அவர்களால் வீடுவாங்கமுடியும்.