இலங்கையில் தேசிய கீதத்தை பாட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!
தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியுள்ளாரா என ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, தேசிய கீதத்தை எவ்வாறு பாடுவது என்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் தேசியக் கொடியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் இருந்தாலும், தேசிய கீதம் நடுவில் பாடப்பட வேண்டும் என்று மட்டுமே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனவும் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைக் குழு இது தொடர்பான அறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அண்மையில் கையளித்துள்ளது.