இனவெறி எதிர்ப்பு முயற்சிகளுக்காக லண்டன் தேவாலயங்களுக்கு புதிய நிதியுதவி
லண்டனில் பன்முகத்தன்மை மற்றும் இன நீதி முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, இங்கிலாந்து திருச்சபை புதிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மதகுருமார்கள் தங்கள் பிரசங்கங்களில் இனவெறி எதிர்ப்பை வலியுறுத்த ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
தேவாலய அதிகாரிகள், லண்டன் மறைமாவட்டத்திற்கு £7.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நிதி, மூன்று ஆண்டுகள் நீடிக்கும் ‘இன நீதி முன்னுரிமை’ திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம், 400 க்கும் மேற்பட்ட திருச்சபைகள் மற்றும் 18 பெருநகரங்களை உள்ளடக்கியது.
மேலும் அடிமைத்தன வரலாற்றை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட ‘Project Spire’ எனும் தனித் திட்டத்திலிருந்து இந்த திட்டம் வேறுபட்டதாகும்.
இருப்பினும், இந்த நிதியுதவி குறித்து சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
லண்டன் மறைமாவட்டத்தின் இன நீதி பொறுப்பாளரான பிஷப் டொக்டர் ஆண்டர்சன் ஜெரேமியா, தேவாலயம் அனைவருக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும், இன நீதி தேவாலயத்தின் பணிகளின் மையமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி, தேவாலயங்கள் மற்றும் பாடசாலைகளில் கல்வி விழிப்புணர்வு, அகதிகள் மற்றும் புகலிடம் கோருபவர்களுக்கு உதவி புரிதல் மற்றும் தலைமையில் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





