ஜெர்மனியில் பணியாற்றுவோருக்கு விரைவில் புதிய நிதியுதவி திட்டம்
ஜெர்மனியில் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது
அதற்கமைய வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நிதியதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை குறைத்து வருகிறது. இதன்காரணமாக வேலையற்றோருக்கான அமைப்பில் பதிவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது
இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றி திண்டாடுவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது
இந்நிலையில் குறித்த நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களை தற்காலிகமாக பாதுகாக்கும் நோக்கில் நிதியுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது
இதற்கான விசேட சட்டம் ஒன்று தொழில் அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு பாதிக்கப்படும் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் இந்த சட்டம் இயற்றப்படவுள்ளது.