ஐரோப்பா

ஜெர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி – சாரதி அனுமதி பத்திர நடைமுறையில் மாற்றம்

ஜெர்மனியில் வாகன சாரதிகள் தங்களது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் சாரதி அனுமதி பாத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜெர்மானியர்கள் தங்களது அடையாள அட்டைகளை தொட்டுணரக் கூடிய அட்டைகளில் அல்லாமல் டிஜிட்டல் முறையில் காட்டுவதை இது இலகுப்படுத்த உள்ளது.

இதற்காக ஒரு சிறப்பு செயலி பயன்படுத்தப்பட உள்ளது. இது பாரம்பரிய காகிதம் மற்றும் பிளாஸ்டிக் அடையாள அட்டைகளை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த டிஜிட்டல் உரிமம் முதலில் ஜெர்மனிக்குள் மட்டுமே செல்லுபடியாகும்.

ஏற்கனவே டிஜிட்டல் முறையினாலான அட்டை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக திட்டம் நடைமுறைக்கு வருவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

இப்போது, ​​அரசாங்கம் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் சோதனை கட்டமாக கருதப்பட்டு செயலி எவ்வாறு செயற்படுகின்றது என உரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

சோதனை வெற்றிகரமாக அமைந்தால், ஜெர்மனியில் ஓட்டுநர் தகுதியை நிரூபிப்பதற்கான ஒரு நிலையான வழியாக இது மாறும். இது உலகில் சாரதி அடையாள அட்டையை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான படியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!