Instagramஇல் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!
பலருக்கும் பிடித்த ஆப்பான இன்ஸ்டாகிராம், புதிய அம்சமாக ஒரு அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.
வாட்ஸ்அப், மெஸ்ஸேன்ஜருக்கு அடுத்தபடியாக அதிக பயனர்களால் உபயோகிக்கப்படுவது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய இடையூறாக இருந்தது தான் யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம் என்பது தான்.
இந்த ஒரு இடையூர் காரணமாக பல பெண்கள், பல பிரபலங்கள், பல பல நூதன மோசடிகளும் நடைபெற்றது. தற்போது, அதற்கு இன்ஸ்டாகிராம் முற்று புள்ளி வைத்துள்ளது. அதாவது, இனி நமக்கு பிடித்தவர்களை தவிர யாராலும் நமக்கு மெசேஜ் செய்ய முடியாது. ஆனால், அதற்கு ஒரு சில செட்டிங்க்ஸை நமது இன்ஸ்டாகிராம் ஆப்பில் செய்ய வேண்டும்.
மேலும், இதை செய்வதன் மூலம் நமக்கு பிடித்தவர்களை தாண்டி எந்த ஒரு தெரியாத நபர்கள் அது யாராக இருந்தாலும் நமக்கு மெசேஜ் செய்ய முடியாது. இதற்கு அந்த நபரை ‘ப்ளோக்’ (Block) செய்யலாம் என்று நமக்கு தோணலாம். ஆனால், இதனால் நமக்கு வேறு ஏதேனும் கணக்குகளில் இருந்து நமக்கு மெசேஜ் செய்ய வாய்ப்பிருக்கிறது.
தற்போது அந்த செட்டிங்க்ஸை பற்றி பார்க்கலாம்.
செட்டிங்ஸ் & ஆக்டிவிட்டி (Settings & Activity) செல்ல வேண்டும்.
அதன் பின், அதில் லிமிட் இன்ட்ராக்ஷன் (Limit interactions)க்குள் செல்ல வேண்டும். அதில் 3 விதமான ஆப்ஷன்கள் நமக்கு காட்டும்.
அதில் முதல் ஆப்ஷன் என்னவென்றால், தெரியாதவர்கள் (அ) விருப்பமிலத்தவர்களிடமிருந்து எதனை நாம் மறைக்க விரும்புகிறோமோ (Mute) அதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நாம் பகிரும் புகைப்படங்களுக்கு அவர்கள் கமெண்ட்ஸ் செய்யகூடாது என்றால் நாம் அதில் நாம் மாற்றிக்கொள்ளலாம்.
2-வது, ஆப்ஷன் என்னவென்றால், யாரை நாம் லிமிட் செய்யவேண்டும் என்பது தான். இதன் மூலம் முன்பு கூறியது போல நமக்கு விருப்பமில்லாதவர்கள் நமக்கு மெசேஜ் செய்ய கூடாது என்றால் இந்த ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.
3-வது ஆப்ஷன் என்னவென்றால், இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் செய்யும் இந்த லிமிட்டிற்கு (Mute) மணிகள், நாட்கள், வாரங்கள் என கால அவகாசம் தேர்வு செய்து கொள்ளலாம்.