AI தொழில்நுட்பத்தில் புதிய வசதி – மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை வைத்து தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தில் தற்போது புதிய வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அது புகைப்படம் கொண்டு தேடும் முரையாகும்.
ஏற்கனவே கூகுளில் நாம் புகைப்படத்தை கொண்டு தேடுகையில் அது சம்பந்தமான தகவல்கள் பயனர்களுக்கு கிடைக்கும்.
அதே போல செயற்கை நுண்ணறிவு திறனான AIஇல் புகைப்படத்தை பதிவிடுகையில் அது சம்பந்தமான தரவுகளை பெற பயனர்கள் பெற முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் யூசுப் மெஹ்தி தெரிவித்தார்.
ஏற்கனவே, AI தொழில்நுட்ப வசதிகளில் பயனர்கள் தங்கள், சந்தேகங்ககள் கேள்விகளை பதிவிட்டால் அதற்கு தகுந்த பதிலை AI தருகிறது.
(Visited 13 times, 1 visits today)





