அமீரகத்தில் புதிய டிஜிட்டல் சேவை – இனி டிஜிட்டல் சேவை மூலம் திருமணம் செய்யலாம்
அபுதாபி நீதித்துறை (ADJD) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம், தொலைவில் இருந்தவாறே திருமணத்தைப் பதிவு செய்யும் டிஜிட்டல் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்ற Gitex Global 2023 என்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் இந்த சேவை காட்சிப்படுத்தியுள்ளது.
இதன்மூலம், அமீரகக் குடியிருப்பாளர்கள் திருமணச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்றவற்றை ஆன்லைனிலேயே எளிதாக முடிக்கலாம்.
மேலும் இரு தரப்பினரின் டிஜிட்டல் கையொப்பங்களும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட இறுதி திருமண ஒப்பந்த ஆவணத்தையும் குடியிருப்பாளர்கள் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)