இலங்கையில் காற்றின் தரம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரமானது சாதகமற்ற நிலையில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி, கேகாலை, காலி உள்ளிட்ட பல பிரதேசங்களில் இந்த நிலைமை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாழைச்சேனை பிரதேசம் தற்பொழுது நுவரெலியா போன்று பனி மூட்டமாக காட்சிளிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது
(Visited 2 times, 1 visits today)