புகைப்பட தொகுப்பு

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் நடிக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்… பூஜையுடன் இனிதே துவங்கியது

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம்தேதி நன்நாளில் அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இப்படத்தின் கதை இயக்கம் – U அன்பு, திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு, ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார், படத்தொகுப்பு – இளையராஜா, ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ, கலை இயக்கம் – P ராஜு, ஸ்டில்ஸ் – சக்திபிரியன், மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா AIM, பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக் என பட்டியலிடப்பட்டுள்ளது.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புகைப்பட தொகுப்பு

முகை திரை அழகி ஆஷா சாந்தினியின் அழகிய புகைப்படம்

Previous image Next image தொடர்புடைய செய்திகள்: தருணம் பட நடிகையா இவங்க? ரொம்ப கியூட்டா இருக்காங்களே!
புகைப்பட தொகுப்பு

தருணம் பட நடிகையா இவங்க? ரொம்ப கியூட்டா இருக்காங்களே!

Previous image Next image தொடர்புடைய செய்திகள்: முகை திரை அழகி ஆஷா சாந்தினியின் அழகிய புகைப்படம்

You cannot copy content of this page

Skip to content