சிறு நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டம்
நாட்டில் இயங்கி வரும் நுண் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில நுண்நிதி நிறுவனங்கள் நாட்டிற்கு புற்று நோயாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மத்திய வங்கியின் ஊடாக அன்றி தனியான நிறுவனமொன்றை நிறுவி அந்த நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.
குற்றவியல் வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்ட வரைபு எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.