ஈரானிலிருந்து தூதரக ஊழியர்களை அசர்பைஜானுக்கு மாற்றும் நெதர்லாந்து
பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் பணியாற்றும் தனது தூதரக ஊழியர்களை அசர்பைஜானுக்கு
தற்காலிகமாக மாற்ற நெதர்லாந்து அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஈரானில் உள்ள டச்சு தூதரகத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக அசர்பைஜானின் தலைநகர் பாகுவிற்கு (Baku)மாற்ற
முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புடைய அதிகாரி பெரெண்ட்சன் சமூக வலைதளமான X தளத்தில்
வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை, பிராந்தியத்தில் நிலவி வரும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.





