முதல் முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து
இங்கிலாந்தில்(England) இந்த வருடம் ஜூன் மாதம் 12ம் திகதி மகளிர் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நெதர்லாந்து(Netherland) அணி அமெரிக்காவை(USA) 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே நேபாளம்(Nepal) மற்றும் தாய்லாந்தை(Thailand) வீழ்த்தி இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ளது
2026ம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையில் 12 அணிகள் இடம்பெறவுள்ள நிலையில், பத்து அணிகள் இப்போது தகுதி பெற்றுள்ளன, இன்னும் இரண்டு அணிகள் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
இறுதி இரண்டு இடங்களுக்கான போராட்டத்தில் ஸ்காட்லாந்து(Scotland), அயர்லாந்து(Ireland), அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.
1937ம் ஆண்டு தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடிய நெதர்லாந்து, 1980 முதல் 2011ம் ஆண்டின் ஆரம்ப காலங்கள் வரை பெண்கள் கிரிக்கெட்டில் வலுவான அணிகளில் ஒன்றாக இருந்தது, 1988 முதல் 2000 வரை நான்கு தொடர்ச்சியான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.




