ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்க நெட்பிளிக்ஸ் முயற்சி – அமெரிக்காவில் சர்ச்சை

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் இந்த வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் அது எதிர்மறையான சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே ஹாலிவுட்டில் திரை எழுத்தாளர்கள் நெட்பிளிக்ஸ் டிஸ்னி அமேசான் போன்ற படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் ஊதியத்தை அதிகரிக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹாலிவுட் நட்சத்திரங்களும் படப்பிடிப்புகளை நிறுத்தி இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
வேலை நிறுத்தம் காரணமாக ஹாலிவுட் படங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவதார் மற்றும் மார்வெல் பட வரிசையின் புதிய படங்களின் ரிலீசும் தாமதமாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)