டிசம்பர் 29ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கும் நெதன்யாகு
இஸ்ரேலிய(Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) டிசம்பர் 29ம் திகதி அமெரிக்காவில்(America) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை(Donald Trump) சந்திப்பார் என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் டிரம்பை சந்திக்கும் நெதன்யாகுவின் ஐந்தாவது வருகை இதுவாகும்.
மேலும், காசாவிற்கான அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர்நிறுத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் தொடங்கும் என்று பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“ஜனாதிபதி டிரம்ப் மற்றும் பிரதமர் நெதன்யாகு இடையேயான சந்திப்பு டிசம்பர் 29 திங்கள் கிழமை நடைபெறும்” என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷோஷ் பெட்ரோசியன்(Shosh Bedrosian) சந்திப்பின் இடம் அல்லது கால அளவு குறித்த விவரங்களை வழங்காமல் குறிப்பிட்டுள்ளார்.
புளோரிடாவில்(Florida) உள்ள அவரது மார்-எ-லாகோ(Mar-a-Lago) எஸ்டேட்டில் நெதன்யாகு டிரம்பை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





