உலகெங்கிலும் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் பாதுகாப்பை தீவிரப்படுத்த நெதன்யாகு உத்தரவு

உலகெங்கிலும் உள்ள தனது நாட்டின் தூதரகங்களில் பாதுகாப்பை அதிகரிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தலைநகரான வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு குண்டர் ஒருவரால் இளம் தம்பதியினர் கொல்லப்பட்டதைக் கேட்டு இஸ்ரேலிய பிரதமர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்த இரண்டு இஸ்ரேலிய தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தாக்குதலுக்குப் பிறகு “சுதந்திர பாலஸ்தீனம்” என்று கூச்சலிட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.