நெஸ்லே சி.இ.ஓ. பணியில் இருந்து நீக்கம்
சுவிட்சர்லாந்து உணவு நிறுவனமான நெஸ்லேவின் தலைமை செயல் அதிகாரி லாரன்ட் ஃபிரிக்ஸ்,பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
வணிக நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவர் நீக்கப்பட்டுள்ளார்.
லாரன்ட் ஃபிரிக்ஸ், தனக்கு கீழ் பணிபுரியும் ஒரு ஊழியருடன் தவறான உறவு வைத்திருந்ததே பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இப்பிரச்சனை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு வெளி ஆலோசகர்களின் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெஸ்லே நிர்வாகம் தெரிவித்தது.
புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிலிப் நவ்ரடில் என்பவரை நியமித்தது.





