நேபாளம் வன்முறை – முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி உயிருடன் எரிப்பு

நேபாள முன்னாள் பிரதமர் ஜலநாத் கானலின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார், போராட்டக்காரர்களால் அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் கொல்லப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
நேபாள ஊடகமான கபார் ஹப், ஒரு கும்பல் ராஜ்யலட்சுமி சித்ரகரை வீட்டிற்குள் அடைத்து வைத்து கட்டிடத்திற்கு தீ வைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
சித்ரகரை ஆபத்தான நிலையில் கீர்த்திபூர் பர்ன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், சிகிச்சையின் போது அவர் உயிரிழந்ததாகவும் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)