செய்தி

சிங்கப்பூரில் மாயமான நபருக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் அயலவர்கள்

சிங்கப்பூர் – அங் மோ கியோவில் உள்ள குடியிருப்பில் 60 வயது முதியவரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை 7:30 மணியளவில், பிளாக் 208 ஆங் மோ கியோ அவென்யூ 1இல் உள்ள வீட்டில் அந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்து.

முதியவர் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 அன்று தனது சைக்கிளில் சென்றதைக் கடைசியாகப் பார்த்ததாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.40 மணியளவில் முதியவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

இயற்கைக்கு மாறான மரணம் குறித்து நேற்று காலை 7:30 மணியளவில் தகவல் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, பொலிஸார் சென்று பார்த்தபோது 60 வயது முதியவர் ஒருவர் வீட்டில் சுயநினைவின்றி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டது.

சிதைந்த நிலையில் இருந்த சடலத்தில் துர்நாற்றம் வீசுவதும் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. முதற்கட்ட விசாரணையின்படி, இதில் சதிச்செயல் ஏதும் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கவில்லை.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!