மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் பேச்சுவார்த்தை!

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன, மியன்மார் பிரதமருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
4வது பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் சென்றிருந்த வேளையில் மியான்மர் பிரதமர் மின் ஆங் ஹ்லைங்கை அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் பாதுகாப்பு செயலாளர் சந்தித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்களை மீட்பதற்கு உதவுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மியன்மார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 25 times, 1 visits today)