நீர் கொழும்பில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் இன்று (12.08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட குறித்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை டங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 20 times, 1 visits today)