இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்துவர வரவேண்டிய நிலை

இலங்கைக்கு வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்துவர வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரேயொரு மயக்க மருந்து நிபுணர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதன் காரணமாக வைத்தியசாலை எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
(Visited 16 times, 1 visits today)