கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: உடனடியாக வெளியேறுமாறு 8 பிரதேசங்களுக்கு உத்தரவு
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, மினிப்பே உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை, கடந்த சில நாட்களில் மண்சரிவு அபாயம் குறித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களைப் பரிசோதிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி சுமிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய மாகாணத்தில் அபாய நிலையில் காணப்பட்ட 128 பாடசாலைகளில், 120 பாடசாலைகளின் பாதுகாப்புப் பரிசோதனைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





