சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்!
																																		சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் செவ்வாய்கிழமை (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார்.
சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
இதேவேளை கடந்த மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கிழக்கு, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)
                                    
        



                        
                            
