ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக நவீன் திஸாநாயக்க நியமனம்

முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போது, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
திசாநாயக்க முன்னர் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சராகவும், சபரகமுவ மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)