ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு எச்சரிக்கை!!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷியா தீவிரமாக எடுக்க மறுக்கிறது.
நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான தடைகள் விதிக்கப்படும். 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
எனவே இந்த 3 தலைவர்களும் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என கூறினார்.