ஜப்பானில் அலுவலகம் ஒன்றை திறக்கும் நேட்டோ!

நேட்டோ தனது பிராந்திய அலுவலகம் ஒன்றை ஜப்பானில் திறக்கவுள்ளது.
இந்தோபசுபிக்கில் உள்ள தனது சகாக்களான அவுஸ்திரேலியா தென்கொரியா நியுசிலாந்து போன்ற நாடுகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்காக இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவின் இந்த முயற்சிக்கு சீனா தனது கடும் எதிர்ப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நேட்டோ ஆசியபசுபிக்வரை தன்னை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு சீனா ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஆசியாவில் இவ்வாறான அலுவலகம் திறக்கப்படவுள்ளமை இதுவே முதல்தடவை என்பதும், குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)