தலைநகர் பாரீஸில் பட்டப் பகலில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்!

பிரான்ஸ் – பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்தனர்.
இதன்போது கடை ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதேவேளை குறித்த கடையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)