ட்ரம்ப்பின் கருத்தால் அமெரிக்க, ஐரோப்பிய வீரர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கும் நேட்டோ
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்து அமெரிக்க, ஐரோப்பிய வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நேட்டோ கூட்டணியின் தலைவர் Jens Stoltenberg தெரிவித்துள்ளார்.
கூட்டணி நாடுகள் ஒன்றையொன்று தற்காத்துக் கொள்ளமாட்டாது என்று சொல்வது அதன் பாதுகாப்பைக் கீழறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ கூட்டணி ஒற்றுமையாய் வலுவாக எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளும் என Stoltenberg உறுதியளித்தார்.
தற்காப்புக்காகக் குறைவாகச் செலவிடும் நேட்டோ கூட்டணியைப் பாதுகாக்கத் தேவையில்லை என டிரம்ப் கூறியிருந்தார்.
சவுத் கரோலைனாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மிகக் குறைவாகச் செலவிடும் கூட்டணி நாட்டை ரஷ்யா தாக்குவதை ஊக்குவிக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.
நேட்டோ கூட்டணி குறித்த ட்ரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு புட்டினுக்குச் சாதகமாக அமையும் என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிக்கேல் கூறினார்.
நட்பு நாடுகளின் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவது நேட்டோ கூட்டணியைப் பலவீனமாக்குவதைப் போன்றது என்று போலந்தின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.