சிங்கப்பூர் முழுவதும் திடீர் சுற்றிவளைப்பு – சிக்கிய கும்பல்

சிங்கப்பூரில் சிங்பாஸ் (Singpass) விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி வங்கிகளில் கணக்குகளை திறந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு அமலாக்க நடவடிக்கையில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
அவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் 20 முதல் 50 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் 26 முதல் 65 வயதுக்குட்பட்ட 15 ஆண்களும், ஏழு பெண்களும் பொலிஸாரின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
கடந்த மார்ச் முதல், சிங்பாஸ் விவரங்களை முறைகேடாக பயன்படுத்தி இணையத்தில் நிறுவன வங்கிக் கணக்குகள் திறப்பதை பொலிஸார் கவனித்தனர்.
அவற்றை பயன்படுத்தி முதலீட்டு மோசடிகள் மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணை வளையத்தில் உள்ள மொத்தம் 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் மோசடியாக பெறப்பட்ட சுமார் S$189,000க்கும் அதிகமான தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.