பிரான்ஸில் மீண்டும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
பிரான்ஸில் மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து மீண்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
மே 1, உழைப்பாளர் தினம் அன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 13 ஆவது நாள் போராட்டமாகும்.
அன்றைய நாளில் பிற்பகல் 2 மணிக்கு Place de la République சதுக்கத்தில் ஆரம்பமாகும் போராட்டம் Nation இல் சென்று நிறைவடைகிறது.
பரிசில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு இலட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)