9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடைபோடும் ; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
மாகாணசபைத் தேர்தலில் 9 மாகாண சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிநடைபோடும் என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல(Sunil Wattagala) தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நாடாளுமன்றத்தில் சலுகைகள் கிடைக்காததால் எதிரணி எம்.பிக்கள் சிலர், பதவி துறந்துவிட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முற்படுகின்றனர். இது அவர்களுக்குள்ள உரிமை. அதனை நாம் சவாலுக்குட்படுத்தவில்லை.
எதிரணிகள் ஒன்று சேர்ந்து போட்டியிட்டால்கூட எமக்கு சவால் இல்லை. 9 சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.” எனவும் சுனில் வட்டகல தெரிவித்தார்.
(Visited 5 times, 5 visits today)





