இரண்டு நாட்களாக முடங்கிய நாசாவின் வலைத்தளம் – 15,000 ஊழியர்கள் பணி நீக்கம்
அமெரிக்க அரசாங்கம் அத்தியாவசியமற்ற சேவைகளை நிறுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நாசாவின் வலைத்தளம் இரண்டு நாட்களாக முடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் பணிநிறுத்தம் மற்றும் கடுமையான நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுமார் 15,000 நாசா ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல செயல்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தை ஒரு அத்தியாவசிய பணியாகக் கருதி தொடர முடிவு செய்துள்ளதாக நாசா அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஆர்ட்டெமிஸ் திட்டம் என்பது கடந்த 5 தசாப்தங்களில் முதல் முறையாக விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும்.
வரவு செலவு திட்டக் குறைப்புக்கள் இருந்தபோதிலும் இந்த திட்டத்தை முழுமையாகத் தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏனெனில் நாசா தலைமையும் இரு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சீனாவை விட முன்னதாக சந்திரனை அடைவதை ஒரு தேசிய பாதுகாப்பு கட்டாயமாகக் கருதினர்.
பணிநிறுத்தத்திற்கு முன்பு, நாசாவின் செயல் நிர்வாகி சீன் டபி சீனா நல்ல நோக்கத்துடன் சந்திரனுக்குச் செல்லவில்லை என்று கூறியிருந்தார்.
“அமெரிக்கா முதலில் அங்கு சென்று அமெரிக்காவிற்கும் நமது சர்வதேச கூட்டாளிகளுக்கும் அமைதியைக் காக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
நாசாவின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆவணத்தின்படி, அரசாங்க முடக்கத்தின் போது இந்தத் திட்டம் 3,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைத் தொடர்ந்து பணியமர்த்தும்.
முன்னர் திட்டமிட்டதை விட இது 2,000 பேர் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.





