சூறாவளிகளைக் கண்காணிக்கும் புதிய துணைக்கோள்கள் அறிமுகம் செய்த நாசா

நியூஸிலாந்தில் சூறாவளிகளைக் கண்காணிக்கக்கூடிய 2 சிறிய துணைக்கோள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நேற்று இதனை அறிமுகம் செய்துள்ளது.
பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய சூறாவளிகளை முன்கூட்டியே முன்னுரைக்க உதவும் முயற்சியில் அந்தத் துணைகோள்கள் ஏவப்படுகின்றன.
அமெரிக்க நிறுவனமான Rocket Lab உருவாக்கிய விண்கலத்தில் அவை பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன. அவை ஒவ்வொரு மணி நேரமும் சூறாவளிகளுக்கு இடையே பறந்து அவற்றைக் கண்காணிக்கக்கூடியவை.
தற்போது இயங்கும் துணைக்கோள்கள், 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மட்டும் புயல்களைக் கண்காணிக்கக்கூடியவை. ஏற்கெனவே இருக்கும் துணைக்கோள்கள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சிறிய துணைக்கோள்களின் மூலம் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்படும் என்று நாசா ஆய்வாளர் கூறினார்.
(Visited 11 times, 1 visits today)