அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அமெரிக்காவின் முதல் பெண் சபாநாயகர் நான்சி பெலோசி(Nancy Pelosi)
அமெரிக்க அரசியலில் ஒரு உயர்ந்த நபரும், பிரதிநிதிகள் சபையின் முதல் பெண் சபாநாயகருமான நான்சி பெலோசி(Nancy Pelosi) தற்போதைய காங்கிரஸின் பதவிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸில் நான்சி பெலோசியின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி 3ம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், “எனது சான் பிரான்சிஸ்கோ(San Francisco) மக்களே, முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் காங்கிரசுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட மாட்டேன்” என்று நான்சி பெலோசி ஒரு காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.
85 வயதான நான்சி பெலோசி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சபாநாயகர் மற்றும் காங்கிரஸின் இரு அவைகளிலும் ஒரு பெரிய அரசியல் கட்சியை வழிநடத்திய முதல் பெண்மணி ஆவார்.
(Visited 2 times, 2 visits today)





