ஆர்பாட்டத்தின் மத்தியிலும் திறந்து வைக்கப்பட்ட நானாட்டான் மின் சக்தி நிலையம்
இயற்கையோடு இணைந்த நிலையான வளர்ச்சி திட்டத்தின் கீழ்’ மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(6) காலை 11 மணியளவில் மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
எனினும் குறித்த காற்றாலை மின்சக்தி நிலைய திறப்பை கண்டித்து நறுவிலிக்குளம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராம பகுதியில் ‘ஹிருரஸ் பவர்’ நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 15 மெகா வாட் காற்று மின் சக்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 06 மின் காற்றாலை கோபுரங்களை கொண்ட குறித்த காற்றாலை மின்சக்தி நிலையத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.