விளையாட்டு

தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நமீபியா அணி

தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் நமீபியா அணி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்த போட்டி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நமீபியா விளையாடிய முதல் போட்டியாகவும் அமைந்தது.

இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.

அந்த இலக்கை நோக்கிச் சென்ற நமீபியா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நமீபியா அணிக்காக, ஷேன் கிரீன் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஜெரார்ட் எராஸ்மஸ் 21 ஓட்டங்களையும், மார்லன் க்ரூகர் 18 ஓட்டங்களையும் ஜேஜே ஸ்மித் மற்றும் லாரன் ஸ்டீன்காம்ப் தலா 13 ஓட்டங்களையும் எடுத்தனர். ரூபன் டிராம்பல்மேன் ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில், நந்த்ரே பெர்கர் மற்றும் ஆண்டிலே சிமெலைன் தலா 2 விக்கெட்டுகளையும், ஜெரால்ட் கோர்ட்னி மற்றும் பிஜோர்ன் போர்டுயின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா அணிக்காக துடுப்பெடுத்தாடிய ஜேசன் ஸ்மித் 31 ஓட்டங்களையும், ரூபின் ஹெர்மன் 23 ஓட்டங்களையும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 22 ஓட்டங்களையும், பிஜோர்ன் போர்டுயின் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பந்துவீச்சில், நமீபியா அணிக்காக ரூபன் டிரம்பல்மேன் 3 விக்கெட்டுகளையும், மேக்ஸ் ஹெய்ங்கோ 2 ரன்களையும், ஜேஜே ஸ்மித், பென் ஷிகோங்கோ மற்றும் ஜெரார்ட் எராஸ்மஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!