யாழ் தேவியை மீண்டும் தொடங்குவதாக நாமல் சபதம்
தற்போதைய நிர்வாகத்தின் செயல்திறனற்ற தன்மையால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி ரயில் பாதைகளின் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இன்று உறுதியளித்துள்ளார்.
30 வருட கால யுத்தத்தை முடித்துக் கொண்டு வடக்கு மாகாணத்திற்கான யாழ் தேவி ரயில் பாதைகளை ராஜபக்ஷ அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது.
எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் தூரமான புகையிரதப் பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.