சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார்.
மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, பாதாள குழு உறுப்பினர் வசம் சென்ற விவகாரம் தொடர்பிலேயே டக்ளஸ் தேவானந்தா அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





