பிரதமருக்கு நாமல் நன்றி தெரிவிப்பு!
விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் விசேட கூட்டத்தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் என்று சபாநாயகர் இன்று அறிவித்தார்.
வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடருக்கு பின்னர் 2026 ஜனவரி 6 ஆம் திகதிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
எனினும், பிரதமர் கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அவசர நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கு ஏற்பாடு உள்ளது.
அதற்கமையவே நாடாளுமன்றம் கூட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, பேரிடர் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடாளுமன்ற அமர்வை கூட்டுமாறு நாமல் ராஜபக்ச வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





