நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாமல் ஆதரவு: மண்கவ்வும் என அரசு அறிவிப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்குரிய சாதாரண பெரும்பான்மைபலம்கூட எதிரணி வசம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.





