நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்திருந்தார்.
கட்சியின் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 37 times, 1 visits today)





